அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார். வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் எழுதிய ‘யார் இந்த இராவணன்’ நூல் வெளியீட்டு விழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திருகோணமலையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.