கட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து, விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்கப் பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால், விமான நிலையத்தின் சான்றளிப்பை பெறுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குவைத் நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்று, விமான நிலைய அதிகாரிகள் ஐவர் மீது, கடந்த 27 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தியது. நாயொன்றுடன் வந்ததையடுத்தே, அந்த ஜோடிக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே, அந்த ஜோடி, அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல் நடத்தினரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குவைத் நாட்டைச் சேர்ந்த ஜோடிக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த ஜோடியை எதிர்வரும் 10ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.