ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் ஏலவே இரண்டு கடிதங்கள் மூலம் உரிய தரப்புக்கு அறிவித்திருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். இந்த செயலணியின் 48 பிரதிநிதிகளில் 2 பேர் மாத்திரமே வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ஏனையோர் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பையுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என தெரிவித்த வடக்கு முதல்வர், இதனால் தாம் இந்த செயலணியை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.