இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட இருந்த புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தை இரத்து செய்வதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள் சிலருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு அமைய இந்த போராட்டத்தை இரத்து செய்ய தீர்மானித்ததாக புகையிரத இயந்திர ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாடுகளை திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டம் இடம்பெற இருந்தது. இருப்பினும் நாளைய தினம் இந்த பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.