வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11பேர் காயங்களுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியினுல் 12 மாணவர்கள் பயணித்ததாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுனருடன் 13 பேர் இருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.