இலங்கையில் மத ரீதியான சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு ஆவனசெய்யப்படும் என்று, அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம், அமெரிக்க அதிகாரிகளுடனான மாநாடு ஒன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் தொடர்ந்தும் மத ரீதியான அமைதியின்மை நிலவுவதாக அண்மைக்காலத்தில் அறிக்கைகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இதனை தணித்து, அனைத்து மதங்களும் தங்களது சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான உலக நாடுகளின் வேலைத்திட்டங்களுடன் இலங்கையும் இணைந்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.