மன்னார் விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற மனித புதைக்குழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவருக்கு அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன் வைத்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை மன்னார் மனித புதைக்குழியில் இருந்து 60 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.