Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், வடமாகாண சபையின் அமைச்சரும், கட்சியின் பொருளாளரும், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான க.சிவநேசன் (பவன்) தலைமையில் 29.07.2018அன்று முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த உள்ளுராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, கலைக்கப்படவுள்ள வட மாகாண சபையின் எதிர்காலம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சேவைகளை வழங்கும் முறைமைகள், கட்சியின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் செயற்பாடுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்பகுதியில் அதிகரித்து வரும் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன. Read more

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட ஸ்ரீ துர்க்கா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா நிகழ்வு (29.07.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் நிலைய முன்றலில் நடைபெற்றது.

ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. இராசரத்தினம் விஸ்ணுறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும் ஓவியக்கலைஞருமான திரு. செல்லத்துரை வரதராஜன், கிராம அலுவலர் திருபரநிரூபசிங்கம் பிரதீபன், புன்னாலைக்கட்டுவன் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு. த.ஸ்ரீமுரளி ஆகியோரும், Read more

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது. புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை கட்சித் தலைவர்கள் ஒன்று கூடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

அதன்படி அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நடைபெற உள்ள உயர் தரப் பரீட்ரைசகளுக்காக நடத்தப்படுகின்ற பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கையடுகளை அச்சிடுதல், மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்காக தங்களது நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலங்கையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் ஊடாக போலியான தகவல்களை வழங்கி நியூசிலாந்தில் உயர் கல்விக்கான வீசாவை விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது.

தாளையடி பகுதியில் கரையில் விடப்பட்டு இருந்த படகுக்கும் அதன் இயந்திரத்திற்கும் நேற்று இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதனால் படகும் அதன் இயந்திரமும் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. தென்னிலங்கை மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு உள்ளூர் மீனவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read more

வவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாடுகளுக்கு விசம் கலந்த தண்ணீரை கொடுத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். Read more

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்து சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more