Header image alt text

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் உரிய உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. Read more

நாட்டில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுதல் தொடர்பிலான கருத்தாடல் குறித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை நிராகரித்த, அரசாங்கம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதற்கான வாய்ப்பு குறித்து கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களான குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டமையால், அந்தச் சலுகை குறித்து கவலைகொள்ளவில்லையென, அமைச்சரவைப் இணை பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். Read more

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளியான கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

நீதிமன்றின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளியே, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். மாற்றுத்திறனாளியான, குமாரசாமி பிரபாகரன், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர். Read more

மத்தல விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலெனக் குறிப்பிட்டுள்ள, ஜே.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் எம்.பியுமான, விஜித ஹேரத், ‘அந்த விமான நிலையம், இந்தியா வசமாவதை கடுமையாக எதிர்ப்போம்’ என்றார்.

‘மத்தல விமான நிலையத்தை, இலங்கை விமானிகளைப் பயிற்றுவிக்கும் தளமாகப் பயன்படுத்துவதே காலோசிதமான செயற்பாடாக அமையும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேரிடம் இவ்வாறு வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Read more

புளொட் அமைப்பின் 29வது வீரமக்கள் தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் ஏற்பாட்டில் கடந்த 21.07.2018 சனிக்கிழமை அன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரை ஆகுதியாக்கிய கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கிளைத்தலைவர் போல் சத்தியநேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில், Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகளின் விசேட தூதுக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பதவிகாலத்தினுள், ஊழல், மோசடிகள் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கையை முதலாம் இடத்திற்கு கொண்டுவர தாம் எதிர்ப்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் ஆசிரிய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பகல் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களென தெரிவித்து அரசியல் சார்பான நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆசிரிய தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்கவிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட முடியாது என ஊடகவியலாளர் ஒருவரால் கூறப்பட்ட கருத்துக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார். Read more

மாணவர்கள் கொழும்பில் இன்று முன்னெடுத்த பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மகாபொல புலமைப்பரிசிலை 1,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும் விரிவுரையாளர்களின் வெற்றிடத்தை நிரப்புமாறு கோரியும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புஞ்சி பொரளை – கெம்பல் மைதானத்திலிருந்து இன்று பிற்பகல் ஆரம்பித்த எதிர்ப்பு ஊர்வலம், மருதானை ஊடாக புறக்கோட்டை வரை சென்று ஜனாதிபதி செயலகம் வரை பயணித்துள்ளது. இதனை நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் லோட்டஸ் வீதி மூடப்பட்டது. Read more