Header image alt text

மன்னாரில் பழைய சதொச கட்டடம் அமைந்திருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் போது, 12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மனித புதைகுழியில் நேற்றைய தினம் (30), அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இவ்வாறு சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த இடத்திலிருந்து, 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 132 இலங்கை ஏதிலிகளை ஏற்றிய படகு ஒன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் வழியில் இடைநிறுத்தப்பட்டது. இந்தோனேசியாவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு காத்திருக்கின்றனர். Read more

தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தன்னுடைய அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் என்பனவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென, அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட இலங்கையர், 25 வயதானவர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர்கள், இடங்களில் பெயர்கள் உள்ளிட்டவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

யால தேசிய வனத்தை நாளை முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறியுள்ளார்.

அதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளது. மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்று சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார். Read more

உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று கிடைக்கிறது.

நேபாளின் காத்மண்டு நகரில் நடைபெற்றுவரும் பிம்ஸ்டெக் அரச தலைவர்களது மாநாடு, இன்று நிறைவுபெறவுள்ள நிலையிலேயே, அதன் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு வழங்கப்படவிருக்கின்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. Read more

இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பினை தான் பாராட்டுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் இருந்து இன்று ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு நோக்கி பயணமாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை மியன்மார் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற கருப்பொருளில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. Read more

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றையதினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மைக்காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், Read more