யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகஸ்தர்களும் இன்று காலை தொடக்கம் துறைசார் செயற்பாடுகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் செயற்படும் ‘ஆவா’ குழுவின் வன்முறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் வீடொன்றுடன் சேர்ந்து அமைந்துள்ள கிராம உத்தியோகஸ்தர் அலுவலகமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இதன்போது குறித்த அலுவலகத்தில் இருந்து உபகரணங்களுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.