ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைரூnடிளி; குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான அர்ப்பணிப்பு இலங்கை அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் உறவை விஸ்தரிப்பதற்கு உதவும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.