மட்டக்களப்பு, வாழைச்சேனை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச மக்கள் சிலர் இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.