உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யினை கோரு­வ­தற்­கான உரித்து பொது எதி­ர­ணிக்கு இல்லை. அர­சாங்­கத்தில் அமைச்சர்­க­ளாக அங்கம் வகித்­துக்­கொண்டு அதே­ கட்­சியை சேர்ந்­த­வர்கள் உத்­தி­யோ­கப்­பூர்வ எதிர்க்­கட்­சி­யாக இருக்க முடி­யாது.

இதற்­கேற்­ற­வ­கை­யி­லேயே பொது எதி­ர­ணியின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை தமக்கு வழங்­க­வேண்­டு­மென்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் பொது எதி­ர­ணி­யினர் கோரி வரு­கின்­றனர்.இதற்­கான கடி­தத்­தையும் சபா­நா­ய­க­ரிடம் அவர்கள் கைய­ளித்­துள்­ளனர். பொது எதி­ர­ணி­யி­ன­ரான தம்­மிடம் 70 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கையில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கொண்ட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ள­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று பொது எதி­ர­ணி­யினர் வாதிட்­டு­வ­ரு­கின்­றனர். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னிடம் கருத்து கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

இது குறித்து அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது,
எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை கோரும் உரித்து பொது எதி­ர­ணிக்கு இல்லை. அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக அங்கம் வகிக்கும் கட்­சி­யொன்றின் உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை வகிக்க முடி­யாது. பொது எதி­ர­ணி­யி­னரின் நிலைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கது அல்ல.

அர­சாங்­கத்­திலும் அங்கம் வகித்­துக்­கொண்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை கோர முடி­யாது. இத­னால்தான் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வி­யை வழங்க முடி­யாது என்ற தீர்­மா­னத்­திற்கு சபா­நா­யகர் வந்திருக்கின்றார்.
பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான செயற்பாடாகவே உள்ளது. எனவே இந்த விடயத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமானதாகும் என்றார்.