அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய பிணைக்காக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவுக்கார சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவருடைய பிணைக்காக முன் வைக்கப்பட்ட அவருடைய இடத்தையும் அரசுடமையாக்க இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு மீதான விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.