Header image alt text

கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி தங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த பகுதியில் இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய மனிதவள திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய தமது பணியகத்தின் ஊடாக மாத்திரமே தென்கொரிய தொழில்வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்துபவர்களது அனுமதியினை இரத்து செய்வது தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாத்தளன் கடற்பகுதியில் இருந்து நான்கு படகுகள் சுருக்கு வலையினை பயன்படுத்தி தொழில் நடவடிக்கைக்கு புறப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சுருக்குவலை பயன்பாட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேப்பாரப்பிட்டி தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான கடலை நம்பி வாழும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். Read more