அரசாங்க பேரூந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அட்டை முறையினை, இந்த வருட இறுதிக்கு முன்னர் அறிமுகப்படுத்த எதிர் பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமானது, சில்லறை காசு பயன்பாடு மற்றும் மிகுதி பணம் கொடுக்கலின் போது ஏற்படும் சிக்கல் நிலையை போக்கும் வகையில், பயணிகளுக்கும் நடத்துனருக்கும் நன்மையளிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.