அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் நாளை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைக் கூறியுள்ளார். சயிட்டம் நெருக்கடியை போன்றே சிங்கப்பூர் உடன்படிக்கையையும் கொண்டு செல்வதுதான் அரசாங்கத்தின் தேவையா என்று சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே கேள்வி எழுப்பியுள்ளார்.