தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு on arrival விசாவினை விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை லாவோஸ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லாவோஸ் நாட்டு எல்லைக்கு வந்த பின்னர் on arrival விசாவுக்கு விண்ணப்பிக்கும் வசதி இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக லாவோஸ் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.