வவுனியா புளியங்குளம் காவற்துறை பிரிவில் இடம்பெற்ற விபத்தில் அளவுக்கதிகமான பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் கடந்த தினத்தில் உயிரிழந்தார்.

புளியங்குளம் லைக்கா ஞானம் கிராமம் பகுதியிலிருந்து போக்குவரத்து வசதியின்மையால் இவ்வாறு அளவுக்கதிகமான மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்தமை தெரியவந்தது. இந் நிலையில் தமது கிராமத்திற்கு பேரூந்து வசதிகள் இருக்கும் பட்சத்தில் தமது பிள்ளைகள் பாதுகாப்பாக பாடசாலை சென்று வர முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக வன்னிப்பிராந்திய பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டதை அடுத்து பிரதி காவற்துறை மா அதிபர் இ,போ.ச தலைவர் ரமன் சிறிவர்தனவுடன் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தமைக்கமைய நேற்று தொடக்கம் விசேட பாடசாலை சேவை அக்கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.