நாட்டில் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தொடர்ந்து அதனை பாவனைக்கு உட்படுத்தி வருவதன் காரணமாக, தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சுற்றிவளைக்கும் செயற்பாட்டை பொலிஸாருக்கு ஒப்படைக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் விசாரணைப் பிரிவு மற்றும் நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபை ஆகியன இணைந்து இதுவரை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் சுற்றாடல் பொலிஸாரை கொண்டு சற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில், கலந்துரையாடியுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.