வட மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் முழுமையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக புலம்பெயர் வாழ் இலங்கை பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.

புலம் பெயர் வாழ் இலங்கை பிரஜைகளுக்கும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே குறித்த உறுதி மொழியினை புலம் பெயர் வாழ் இலங்கை பிரஜைகள் வழங்கியுள்ளனர். அத்துடன் வடக்கல் போதை பொருள் பாவனையை கட்டுபடுத்துவதற்கும் வன்முறை சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கும் முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.