புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்தார்.

இந்த விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் திரு. த.யுகேஸ் மற்றும் ஆசிரியைகளுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் அவர் மேற்கொண்டிருந்தார். இதன்போது பாடசாலையின் அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அதிபரும், ஆசிரியைகளும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்.இதனையடுத்து பாடசாலையின் பகுதிகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பாடசாலைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான முயற்சிகளை எடுப்பதாக கூறினார்.