அரச வைத்திய அதிகாரிகளால் நேற்றுக்காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம், இன்றுகாலை 08 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுதல், அடிப்படை சம்பளங்களை உயர்த்துதல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.