மேற்கத்தேய நாடுகளில் பணியாற்றும், இலங்கை இராஜதந்திரிகள் பலருக்கு விரைவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. குறித்த அதிகாரிகளின் நடத்தையால் இலங்கையின் புகழ் மழுங்கடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீள நாடு திரும்புமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.