மக்கள் முகம் கொடுக்கின்ற அடிப்படைய பிரச்சினைகள் தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைகுழுவின் கீழ் 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தேசிய காவற்துறை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. போதைப்பொருள், வீதி விதிமுறை மீறல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்டவையை தடுப்பது தொடர்பில் குறித்த காவற்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.