மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 102ஆவது மாதிரிக் கிராமமான ´லூர்து நகர்´ கிராமம் வைபவ ரீதியாக இன்று காலை கையளிக்கப்பட்டது.

இன்றுகாலை 10.30 மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு ´லூர்து நகர்´ கிராமத்தை வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தார். குறித்த கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 23 வீடுகளை வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

குறித்த வீடுகள் திறப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், வடமாகாண அபிவிருத்தி மற்றம் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.மோகன்ராஸ் உற்பட பிரதேசை சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 1093 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் மற்றும் கடன் திட்டத்திகாக தலா ஒரு இலட்சம் ரூபா கடன் அடிப்படையில் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டன.