புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தினம் கடந்த ஜூலை 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் யாழ். நீர்வேலியில் புளொட்டின் வலிகாம்ம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர். இராசேந்திரம் செல்வராஜா (செல்வம்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து நீர்வேலி மூத்த விநாயகர் (வாய்க்காத்தரவை பிள்ளையார்) கோவில் மற்றம் நீர்வேலி சந்தி பாலம் உள்ளிட்ட பிரதேசங்களில் சிரமதானமும் இடம்பெற்றது. அத்துடன் இராசேந்திரன் செல்வராஜா அவர்களின் ஏற்பாட்டில் அத்தியார் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு மழைநீர் சேமிப்பதற்கான நீர்த்தாங்கி ஒன்றும் பாடசாலையின் அதிபர் திரு. கு.ரவிச்சந்திரன் அவர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் பொருளாளரும், வடமாகாண விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசன்,

வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் தவநாயகம், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் அகீபன் மற்றும் முகுந்தன், முத்துக்குமார், குமார், வெ.துவாரகன், ஞானப்பிரசாத், முகுந்தன்(அறிவிப்பாளர்), பவன், கரன், தேவிகா, கிரி உள்ளிட்ட பலரும், பிரதேச இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர்.