வவுனியா வைரவப்புளியங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து குருமன்காடு நோக்கி வைரவப்புளியங்குளம் வீதியூடாக பயணித்த கார் மீது குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு மேலாகியும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகளிக்கவில்லை என சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.