இலங்கை உட்பட இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்காவிற்கான ராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.

ஆசியான் பிராந்திய மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், இதற்காக 30 கோடி அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளின் கடல் பாதுகாப்பு, இடர் மனிதாபிமான உதவி, பரஸ்பரம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா, மொங்கோலியா, நேபாளம்,மற்றும் வியட்நாம் பயன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.