தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெறுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் கலந்துகொள்கின்றார். எனவே, அனைத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.