இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவிற்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஓஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வேக்கான புதிய தூதுவராக பேராசிரியர் அரூஷா குரேவும் பிரேஸிலுக்கான தூதுவராக எம்.எம். ஜஃபீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவிற்கான இலங்கை தூதுவராக எம்.ஏ.கே. கிரிஹாகமவும் போலந்திற்கான தூதுவராக சீ.ஏ.எச்.எம். விஜேரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுவீடனுக்கான தூதுவராக எஸ்.எஸ். கனேகம ஆராச்சியும் வியட்நாமிற்கான தூதுவராக எச்.எச். பிரேமரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவிற்கான உயர்ஸ்தானிகராக அநுருத்த குமார மல்லிமாராச்சியும் பாகிஸ்தானிற்கான உயர்ஸ்தானிகராக அநுர்தீன் மொஹமட் ஷகீட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.