இலங்கைக்கான வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் அனுமதியின் கீழ் இந்த நிதி பயன்படுத்தப்படும் முறை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பின் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இலங்கையில் மனிதாபிமானம் மற்றும் அனர்த்த நிவாரண திட்டத்திற்காக இந்த நிதியை பயன்படுத்த அமெரிக்கா எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.