யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுமாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நடராசா பிரசன்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிக வேகமே இந்த விபத்து இடம்பெறக் காரணம் என்பதுடன் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.