சவுதி அரேபியாவில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி கெசட்டை (Saudi Gazette) கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 999 பேர் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சவுதி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பட்டியல் ஒன்றில் பல புதிய நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த புதிய பட்டியலில் இலங்கை, சீனா, எரித்திரியா(Eritrea), ரஸ்யா, ஓமான், கிரிகிஸ்தான் (Kyrgyzstan) மற்றும் கென்யா ஆகிய நாடுகளும் இணைந்துக்கொள்ளப்பட்டுள்ளன.