யாழ் சிறைச்சாலைக்கு மேலதிக கட்டிடங்களை கட்டுவதற்கு எதிராக யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக இந்த கட்டிடங்கள் கட்டப்படுவதாக, ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உரிய தரப்புக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.