பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்’ காஷ்மீர் கப்பல் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நான்கு நாட்கள் பயணத்துக்காக வருகை தந்துள்ள குறித்த கப்பல், நாட்டில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கையின் முக்கிய கப்பல் துறைமுகங்களுக்கு செல்லவுள்ளதுடன் கப்பலில் வருகை தந்துள்ளவர்கள், இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நட்புறவு கைப்பந்து போட்டியொன்றிலும் பங்கேற்கவுள்ளனர். 95 மீட்டர் நீளமும் 12.2 மீட்டர் அகலமும் கொண்ட குறித்த டெசிக் பீ.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் கப்பல் 1550 டொன் கொள்ளளவு கொண்டதென்பதுடன் அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட 74 பேர் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் 16ம் திகதி இக்கப்பல் இங்கிருந்து புறப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.