எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுபிற்பகல் ரயில்வே தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். நேற்றைய பேச்சுவார்த்தையின்போது, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே, அமைச்சர் மகிந்த அமரவீர, உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினையை இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார். ரயில் ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சினை காணப்படுவதை ஏற்றுக் கொள்வதாகவும் அதனைத் தீர்க்காவிடின், ஏனைய அரச ஊழியர்களுக்கும் அதன் தாக்கம் ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.