புத்தளம் பிரதேசத்தில் கடல் பகுதியில் கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவு பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

புத்தளம் கடற்பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாக அந்த அதிகாரசபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.அந்த மருத்துவ கழிவு பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை அப்புறப்படுத்துவதில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என்பதுடன், அவற்றை விரைவாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டர்னி பிரதீப் குமார கூறியுள்ளார்.