கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இராணுவ ரக் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி 55 ஆம் கட்டை பகுதியி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான க. குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.