வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 33 வயதுடைய தாயும் அவரது 4 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மகன் கிணற்றில் தவறி விழுந்ததால் அவரைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த தாயையும், மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடிய நிலையிலேயே, அவர்களின் சடலங்கள் இன்று முற்பகல் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.