கட்டுநாயக்க விமான நிலையத்தின் இருந்து கொச்சின் நோக்கி பயணிக்க இருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை மதியம் வரை அங்கு செல்ல உள்ள அனைத்து விமானங்களுமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. கொச்சின் விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் இவ்வாறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.