இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தலiமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை – இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.