அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதென சங்கத்தின் மேல் மாகாண பிரதான அமைப்பாளர் யூ.கே குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

புதிய அபராத பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். புதிய அபராத பத்திரம் மூலம் பேருந்து சாரதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த போராட்டத்திற்கு தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக பணிப்புறக்கணிப்பு குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.