பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

நேற்று மாலை 7 மணியளவில் கிளிநொச்சிக்கு சென்றடைந்த பிரதமர், கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கு அருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இரவு கிளிநொச்சியில் தங்கியிருந்த பிரதமர் இன்று மன்னார் மடுவுக்கு விஜயம் மேற்கொள்வாரென கூறப்படுகிறது.