இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்குக் கோரிக்கை விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் சமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்வரும் 9ஆம் திகதி வரை குறித்த கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.