சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கும் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் தோன்றியுள்ள முறுகல்நிலை காரணமாக, 1184 சிறைக் காவலர்களுக்கான வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதவிக்காக இணைத்துக்கொள்ளும் புள்ளி மட்டத்தை அதிகரிப்பதற்கு அமைச்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்தால், குறித்த பதவிக்காக தெரிவுசெய்யப்பட்ட 900 பேருக்கு அதிகமானோர் பதவி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஜுலை மாதமே புதிய சிறைக் காவலர்களுக்கான நியமனங்கள் வழங்க தீர்மானித்திருந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைமுறைக்கமைய, உயர் புள்ளிகள் பெறாதவர்களுக்கு 27- 32 க்கிடையில் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்து, இந்த பதவிக்கு தகுந்தவர்களை நியமித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும், 40 புள்ளிகளுக்கு அதிக புள்ளிகளைப் பெற்றவர்களை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அரச பணிகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.