இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, விசாரணை அதிகாரிகளாக பட்டதாரிகள் 200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என, ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அதிகாரிகள் 400 பேர் தேவைப்படுவதுடன், தற்போது 200 பேர் வரையே கடமையாற்றி வருகின்றனர்.