கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர். வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக வைத்தியசாலை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக எய்ம்ஸ் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. (நன்றி, மாலைமலர்)