மத்திய, மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் வரையானப் பகுதிகளில் இன்றைய தினம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக, கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.